சிதம்பரம் ஸ்தலத்தின் பெருமைகள்!

சைவர்களுக்கு கோவில் என்றால் சிதம்பரத்தையே  குறிக்கும். இக்கோவில் தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற மூவகையாலும் சிறந்து விளங்குகிறது. இக்கோவில் பஞ்ச பூதங்களுள் ஆகாயத் தலமாக விளங்குகிறது. 

மற்ற தலங்கள் பின்வருமாறு,            
திருவாரூர் -  ப்ரிதுவித்தலம்
திருவானைக்கா - நீர்
திருவண்ணாமலை - நெருப்பு
திருக்காளத்தி - காற்று என்பன.

இறைவன் 5 வகையான சபைகளில் நடனமாடுவதாகவும்,  இது பொற்சபை என்றும் கூறுவர்

மற்ற சபைகள் பின்வருமாறு ,
திருவாலங்காடு - இரத்தின சபை
மதுரை - வெள்ளியம்பலம்
திருக்குற்றாலம் - சித்திரசபை
திருநெல்வேலி - தாமிரசபை என்பவை.  

புலிக்கால் முனிவர் வழிப்பட்ட தலங்கள் புலியூர் எனப்படும். அவற்றில் இது பெரும்பற்றப் புலியூர் எனப்படும். மேலும் முக்தி தலங்கள் நான்கினுள் இது தரிசிக்க முக்தி தரும் தலம் ஆகும். பூஜாகால திருத்தலங்கள் ஆறினுள்இது அர்த்த சாம பூஜைத் தலம் ஆகும். மேலும் ஆறு வகை ஆதாரத் தலங்களில்இது அநாகத  ஆதாரத்தலமாக இதயத்தலமாக விளங்குகிறது. இறைவன் ஆடிய 7 வகை தாண்டவங்களில்தில்லை ஆனந்த தண்டவத் தலமாக விளங்குகிறது. மேலும் சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பட்ட திருத்தலம் ஆகும். 

Comments

Popular posts from this blog

சிதம்பரம் பெயர் காரணம் ?

சிற்றம்பலம்

சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்