சிற்றம்பலம்
சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலின் முதல் பிரகாரத்திற்குள் நுழையும்போதே முதலில் நம் கண்களுக்குத் தெரிவது , சிற்றம்பலத்தின் தங்க ஓடுகள் வேய்ந்த விமானம். சித்சபை எனப்படும் பொன்னம்பலத்தின் மேல் 9 தங்கக் கலசங்கள் உள்ளன. இவை 9 சக்திகளைக் குறிக்கும்.பொன்னம்பலத்தில் உள்ள 64 கைம்மரங்கள் 64 கலைகளைக் குறிக்கும். அதில் வேயப்பட்டுள்ள 21600 ஓடுகள் நாம் ஒவ்வொரு நாளும் விடும் சுவாசங்களின் எண்ணிக்கை ஆகும். அவற்றில் பொருத்தப்பட்டுள்ள 72000 ஆணிகள் மனிதனின் சுவாச ஆதார நாடிகளாகும். நம் இதயத்தில் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்தவே மனித உடல் போல் அம்பலம் அமைந்துள்ளது. மனிதனுடைய இதயம் , உடம்பின் நடுவே இல்லாமல் இடப்புறத்தே அமைந்திருப்பது போல நடராஜர் கர்ப்பக்கிருகம் திருக்கோவிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே உள்ளது. பொன்னம்பலத்திலுள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் 5 வெள்ளிப்படிகள் ஐந்தெலுத்து மந்திரத்தையும் 96 வெள்ளிப்பலகணிகள் 96 தத்துவங்களையும் குறிக்கின்றன. சித்சபையிலுள்ள 5 தூண்கள் ஐம்பொறிகளைக் குறிக்கின்றன....