சிதம்பரம் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகங்கள் மற்றும் நித்திய பூஜைகள்
ஒரு வருடத்தில் 6 நாட்கள் நடராஜருக்கு மிகச்
சிறப்பாக அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சித்திரையில் - திருவோணம் நட்சத்திரம், ஆனி மாதத்தில் - உத்திர நட்சத்திரம், மார்கழியில் - திருவாதிரை நட்சத்திரத்திலும் , ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூர்வ பட்ச சதுர்த்தசியிலும் (பௌர்ணமிக்கு முந்தைய நாள்) நடைபெறும் அபிஷேகங்களைக் கண்டு
வழிபடுவது விசேடமானது.
தில்லை நடராஜருக்கு நாள்தோறும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
இரவு 10 மணிக்கு நடைபெறும் அர்த்த சாம
பூஜை மிக விசேடமானது. நடராஜரின் பாதுகையை
வெள்ளி மற்றும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, பள்ளியறையில் வைத்து நைவேத்தியம், தீபாராதனை நடைபெறும். பிற சிவ தளங்களிலுள்ள
சிவகலைகள் அனைத்தும் இரவு வழிபாட்டிற்குப் பிறகு அர்த்த சாமத்தில் ஒடுங்கும்
ஒப்புயர்வற்ற பெருந்தலமாகும் சிதம்பரம். எனவே இங்கு அர்த்தசாம
வழிப்பாட்டில் கலந்து கொள்வது மிகவும் சிறப்புடையதாகும்.

Comments
Post a Comment