Posts

சிதம்பரத்தில் நடைப்பெற்ற அற்புதங்கள்

Image
  1. மாணிக்கவாசக சுவாமிகள் ஒரு ஊமைப் பெண்னை பேச வைத்தது.                      2. மாணிக்கவாசகர் , திருவாசகத்தின் பொருள் கூத்தப் பெருமானே எனக் கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தது.                      3. திருநாளைப் போவார் தீயில் மூழ்கி ஓர் அந்தன வடிவுக் கொண்டு எழுந்து இறைவனைத் தரிசித்தது.                       4. திருநீலகண்டநாயனார் தமது மனைவியுடன் , திருக்குளத்தில் மூழ்கி இளமை வரப் பெற்று இறைவனின் திருக்காட்சி கண்டு வணங்கி , நெடு நாள் வாழ்ந்தது.                        5. பெத்தான் சாம்பான் என்னும் விறகு வெட்டிக்கு உமாபதிசிவம் தீட்சை அளித்து , பெத்தான் சாம்பானும் ,...

தில்லை கோவிந்தராசப் பெருமாள்

Image
நடராஜப் பெருமானின் சந்நிதி எதிரில் தென்புறம் உள்ள படிகளின் மேலேறி நின்று பார்த்தால் தெற்கு நோக்கி நடனமாடும் நடராஜரையும் , தென்வடலாக பள்ளி கொண்ட பெருமாளையும் , ஒரே நேரத்தில் நாம் தரிசனம் செய்யலாம்.   இவ்வித அமைப்பு   வேறு எங்குமே காண முடியாது. கி.பி. 8 ம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிந்தராசப் பெருமானின் சந்நிதி தில்லை திருச்சித்திரக் கூடம் எனப்படும். திருமங்கை யாழ்வாராலும் , குலசேகராழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து உறைவது இத்தலத்தின் பெருஞ்சிறப்பாகும். சைவ வைணவ ஒற்றுமைத்தலமாக சிதம்பரம் விளங்குகிறது.   அய்யப்ப தீட்சிதர் என்பவர் , இருவரையும் ஒருங்கே போற்றும் முறையில் வட மொழியில் தோத்திரப் பாடல்கள் பாடியுள்ளார்.

சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்

Image
சிற்றம்பலத்தைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் கூத்தாடும் விநாயகர் ,   லிங்கோத்பவர் ,   ஆறுமுகப் பெருமான் சந்நிதிகளை அடுத்து மேல் மாளிகையையும் ஆகாய லிங்கத்தையையும் , கிழக்கில் பிச்சாண்டேஸ்வரர் ,   பைரவர் சந்நிதிகளையும் வணங்கலாம். இவற்றிற்கு எதிரில் பரமானந்த கூவம் என்னும் தீர்த்தக் கிணற்றையும் ,   பிரம்மாவும் , சண்டிகேஸ்வரர்ரும் சேர்ந்து அமர்ந்துள்ள கருவறையையும்   தரிசிக்கலாம். இக்கோவிலில் இறைவன் ஆடல் புரியும் சிற்சபை ,   அதன் முன்னுள்ள கனக சபை , ஊர்த்துவ தாண்டவர் சந்நிதி ஆகிய நிறுத்த சபை , உற்சவர்கள் எழுந்தருளி உள்ள தேவசபை , ஆயிரங்கால் மண்டபமாகிய இராச சபை என 5 சபைகள் உள்ளன.

நடராஜப் பெருமான்

Image
சிதம்பரத்தில் அருவத் திருமேனியாக சிதம்பர ரகசியத்தையும் , உருவத் திருமேனியாக கூத்தப்பெருமானையும் , அருவுருவத் திருமேனியாக ஸ்படிக லிங்கத்தையும் ஒருங்கே கண்டு தரிசிக்கலாம்.                                                   இறைவன் உயிர்களுக்கு முக்தியருள ஐந்தெழுத்தையே தம்மேனியாகவும் ,   ஐந்து தொழில்களை இயற்றும் ஆனந்தக் கூத்தினையே ஆடி அருளுகின்றார். இவ் ஐந்து தொழில்களுக்கு உட்பட்டு உலக உயிர்கள் இயங்குகின்றன.

சிதம்பர ரகசியம்

Image
                      எல்லாம் வல்ல இறைவன் முக்கண்களும், நான்கு திருக் கரங்களும் ,  இளம்பிறை , பாம்பு ,  ஊமத்த நறுமலர் ,  கங்கை தங்கிய சடை மகுடம் உடையவராகவும் , புளித்தோலாடை அணிந்து நீறணிந்த மேனியும், குமிண்சிரிப்பு உடையவராகவும் ,  இடப்பக்கத்தே உள்ள சிவகாமி அம்மையார் கண்டுகளிக்க ஆனந்தத் திருக்கூத்தினை ஆடியருளுகிறார். இவருக்கு அருகில் இரத்தின சபாபதி திருவுருவம் உள்ள பேழையும் ,  ஸ்படிகலிங்கம் உள்ள பேழையும் வைக்கப்பட்டுள்ளன. நடராஜப் பெருமானுக்கு வலப்பக்கத்தில் , ஒரு பொன்னாலான வில்வ இதழ் மாலை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இது கறுப்புத் திரை ஒன்றினால் மறைக்கப்பட்டுள்ளது. திரையை நீக்கி கற்பூரம் காட்டும் போது நாம் பலகணி வழியாக இந்த மாலையைத் தரிசிப்பது , இறைவன் அருவமாக வான் வெளியில் இருக்கிறார் என்பதைக் குறிக்கும். இதுவே சிதம்பர ரகசியம் ஆகும்.

சிற்றம்பலம்

Image
சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலின் முதல் பிரகாரத்திற்குள் நுழையும்போதே   முதலில் நம் கண்களுக்குத் தெரிவது ,   சிற்றம்பலத்தின் தங்க ஓடுகள் வேய்ந்த விமானம். சித்சபை எனப்படும் பொன்னம்பலத்தின் மேல் 9   தங்கக் கலசங்கள் உள்ளன.   இவை 9   சக்திகளைக் குறிக்கும்.பொன்னம்பலத்தில் உள்ள 64 கைம்மரங்கள் 64 கலைகளைக் குறிக்கும். அதில் வேயப்பட்டுள்ள 21600   ஓடுகள் நாம் ஒவ்வொரு நாளும் விடும் சுவாசங்களின் எண்ணிக்கை ஆகும். அவற்றில் பொருத்தப்பட்டுள்ள 72000   ஆணிகள் மனிதனின் சுவாச ஆதார நாடிகளாகும். நம் இதயத்தில் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்தவே மனித உடல் போல்  அம்பலம் அமைந்துள்ளது.    மனிதனுடைய இதயம் , உடம்பின் நடுவே இல்லாமல் இடப்புறத்தே அமைந்திருப்பது போல நடராஜர் கர்ப்பக்கிருகம் திருக்கோவிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே உள்ளது. பொன்னம்பலத்திலுள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் 5 வெள்ளிப்படிகள் ஐந்தெலுத்து மந்திரத்தையும் 96 வெள்ளிப்பலகணிகள் 96   தத்துவங்களையும் குறிக்கின்றன. சித்சபையிலுள்ள 5 தூண்கள் ஐம்பொறிகளைக் குறிக்கின்றன....

ஆனித் திருமஞ்சனம்

Image
    ஆனி  மாதம் உத்தர நட்சத்திரத்திற்கு முன் கொடியேற்றி பத்து நாள்  திருவிழா, மார்கழித் திருவிழா போன்றே நடைபெறும். ஒன்பதாவது நாள் பஞ்ச மூர்த்திகள் தேர்த் திருவிழாவும் , பத்தாம் நாள் அதிகாலை திருமஞ்சனம் , அர்ச்சனை , பூஜை அனைத்தும் நடைபெறும். மதியத்திற்கு மேல் அம்மையையும் , அப்பனையும் கோவிலுக்குள் சித்சபைக்கு நடனம்மாடிக் கொண்டே சென்று ஏளுந்தருலச் செய்யும் காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்த் திருவிழாவையும் ,  நடனக் காட்சியையும் காண என்ன தவம் செய்தோம் என்று மக்கள் பேசிக் கொள்வர்.   இந்த 2   திருவிழாக்களிலும் ,  இக்கோவிலின் மூலவ மூர்த்தியான ஸ்ரீ நடராஜர் பெருமானே வீதிக்கு எழுந்த்தருளி ,  தன்னைக் காண கோவிலுக்கு வர இயலாத மனிதர்கள்   முதல்   அனைத்து ஜீவராசிகளுக்கும்   திருக்காட்சி அருளுவது இறைவனின் கருணையாகும்.   

மார்கழி திருவாதிரை திருவிழா

Image
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடியேற்றி பத்து நாள் விழா நடைபெறும். முதல் எட்டு நாள் திருவிழா வரையிலும் பஞ்ச மூர்த்திகளின் வீதிவுலா நடைபெறும். ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா அன்று மூலவரான நடராஜர் , சிவகாமி அம்மையார் , விநாயகர் , முருகன் , சண்டீகேஸ்வரர் முதலான பஞ்ச மூர்த்திகள் ஐந்து தேர்களில் வீதி வலம் வருவார்கள். பின்னர் நடராஜரையும் , சிவகாமியம்மையையும் ஆயிரங்கால் மண்டபத்தில்  எழுந்தருளச் செய்து பத்தாம் நாள் காலையில் திருமஞ்சனம் செய்து திருவாபரணங்கள் சாத்தி அர்ச்சனை , பூஜை முதலியன செய்து மதியத்திற்கு மேல் சித்சபைக்கு எழுந்தருளச் செய்வார்கள். அப்பொழுது நடராஜரும். சிவகாமியம்மையும் நடனம் ஆடிக் கொண்டே சித்சபைக்கு சென்று எளுந்தருளும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த நடனக் காட்சியைக் காண லட்சக் கணக்கில் மக்கள் திரண்டு நிற்பர். இதுவே புலிக்கால் முனிவருக்காகவும் ,   பதஞ்சலி முனிவருக்காகவும் இறைவன் ஆடியருளிய ஆனந்த திருக்கூத்து ஆகும்.

சிதம்பரத்தில் நடைபெறும் முக்கியமான 2 திருவிழாக்கள்

Image
நடராஜருக்கு நடைபெறும் பல திருவிழாக்களில் இரண்டு திருவிழாக்கள் மிக முக்கியமானவை. 1. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூர்ய உதயத்திற்கு முன் நடைபெறும் அபிஷேகம்.  2.  ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூர்ய உதயத்திற்கு முன் நடைபெறும் அபிஷேகம்.  

சிவகாமசுந்தரி அம்பாள் திருக்கோவில்

Image
மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தத்திற்கு எதிரில் அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. அம்பாள் சிவகாமசுந்தரி அழகான திருக்கோலத்தில் கிழக்கு முகமாக நின்று அருள் புரிகிறார். இங்கு சித்ரகுப்தர் சந்நிதி அமைந்துள்ளது.         அடுத்து வடக்கு பக்கமாகச் சென்றால் துர்க்கை அம்மை சந்நிதி உள்ளது. சண்முகப் பெருமான் சந்நிதி க்கு  நேர் எதிரில் நவ லிங்கக் கோவில் அமைந்துள்ளது. இந்த லிங்கங்களை நவக்கிரகங்கள் ஒற்றுமையுடன் தத்தம் வரிசையில் அமைத்து வழிபட்டதாகக் கூறுவர்.                               நவலிங்கக் கோவிலுக்குக் கிழக்கில் ராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இங்கு தான் நடராஜரின் ஆனந்த தாண்டவம் நடைபெறுகிறது. அதாவது இம்மண்டபத்தில் தான் நடராஜப் பெருமானுக்கு ஆணி உத்திரம் , மார்கழி திருவாதிரை நட்சத்திரங்களில் அபிசேகங்களும், அலங்காரமும் நடைபெறுகிறது. இங்கு தான் சேக்கிழார் திருத்தொண்டத்தொகை என்னும் பெரிய புரா...

சிதம்பரம் திருக்கோவில் அமைப்பு

Image
இக்கோவில் 51 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள 4 ராஜ கோபுரங்களும் ஒவ்வொன்றும் 135 அடி உயரம் உடையது. 7 தலங்களும் 13 பெரிய செப்புக்கலசங்களும் உடையது. நடராஜப் பெருமான் தெற்கு முகமாக எழுந்தருளியிருப்பினும் திருவிழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு அனைத்தும் கிழக்குப் பக்கம்முள்ள கோபுரவாசல் வழியாகவே நடைபெறுகின்றன.        தெற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்றால் தென் மேற்கு மூலையில் சந்நிதி கொண்டுள்ள முக்குருணி விநாயகரை முதலில் தரிசிக்கிறோம். இவர் 8 அடி உயரமுள்ள  திருவுருவினர். சிறந்த வரப்பிரசாதி ஆவார். இவ்வெளிப் பிரகாரம் வழியாக மேற்குக்  கோபுரம் சென்றால் அங்கு வெளியில் நர்த்தனக் கணபதியைக் காணலாம். இவரே தல விநாயகர் ஆவார். இவர் துர்வாச முனிவருக்கு இரவில் சாம வேலையில் நடனம் செய்து காட்சி அருளியவர்.        மேற்கு கோபுரத்தின் உட்புறத்தில் வடக்குப் பக்கத்தில் பாலசுப்பிரமணியர் சந்நிதி ,  மதுரை சோமசுந்தரர் சந்நிதி ,  திருமூல விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அவற்றிற்கு ஏதிரில் சிவகங்கை தீர்த்தம்...

சிதம்பரம் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகங்கள் மற்றும் நித்திய பூஜைகள்

Image
ஒரு வருடத்தில் 6 நாட்கள் நடராஜருக்கு மிகச் சிறப்பாக அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சித்திரையில் - திருவோணம் நட்சத்திரம் , ஆனி  மாதத்தில் - உத்திர நட்சத்திரம் ,  மார்கழியில் - திருவாதிரை நட்சத்திரத்திலும்  ,  ஆவணி, புரட்டாசி,  மாசி மாதங்களில் பூர்வ பட்ச சதுர்த்தசியிலும் (பௌர்ணமிக்கு முந்தைய நாள்)  நடைபெறும் அபிஷேகங்களைக் கண்டு வழிபடுவது விசேடமானது. தில்லை நடராஜருக்கு  நாள்தோறும்   6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு நடைபெறும் அர்த்த சாம பூஜை மிக   விசேடமானது. நடராஜரின் பாதுகையை வெள்ளி மற்றும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து , பள்ளியறையில் வைத்து நைவேத்தியம், தீபாராதனை நடைபெறும். பிற சிவ தளங்களிலுள்ள சிவகலைகள் அனைத்தும் இரவு வழிபாட்டிற்குப் பிறகு அர்த்த சாமத்தில் ஒடுங்கும் ஒப்புயர்வற்ற பெருந்தலமாகும் சிதம்பரம். எனவே இங்கு அர்த்தசாம வழிப்பாட்டில் கலந்து கொள்வது மிகவும் சிறப்புடையதாகும்.

நடராஜரின் ஆனந்த தாண்டவம்!

Image
  நடராஜப் பெருமானின் வலது மேல் திருக்கரத்தில் உள்ள உடுக்கை உலகின் தோற்றத்தையும் , அபயமளிக்கும் திருக்கரம் காத்தலையும் , இடது மேல் திருக்கரத்தில் உள்ள நெருப்பு அழித்தலையும் , முயலகன் என்னும் பூதத்தின் மேல் உள்ள கால் மறைத்தலையும் , தூக்கிய கால் முக்தி அருள் புரிதலையும் நிகழ்த்துகின்றன. இந்த நடனம் ஐந்தெழுத்து மந்திரமாகிய "நமசிவாய" என்பதைக் குறிக்கும் என்றும் கூறுவர். சுற்றியுள்ள திருவாச்சி ஓங்காரத்தைக் குறிக்கும் என்றும் கூறுவர். இவர் அசைந்தால் தான் உலக உயிர்கள் அசையும். இவர் தமது ஆட்டத்தை நிருத்தும் பொழுது உலக இயக்கமே நின்றுவிடும்.

சிதம்பரம் தோன்றக் காரணமான இரு முனிவர்கள்

Image
நிலவுலகில் தவம்  செய்வதற்கு  ஏற்ற இடங்கள் எத்தனையோ இருப்பினும் , மிகச் சிறந்த தலம் இதுவே என்று தனது தந்தையாரால் சுட்டிக்காட்டப்பட்ட இத்தலத்திற்கு வந்த புலிக்கால் முனிவர் தில்லை வனத்தினிடையே ஓர் அழகிய தடாகத்தையும் அதன் தென் பகுதியில் ஓர் ஆழமர நிழலில் சிவலிங்கத் திருவுருவத்தையும் கண்டு அங்கேயே ஒரு தவச்சாலை அமைத்து பூசித்து வந்தார். நமக்கு கிடைத்த புராண வரலாற்றின் படி இவரே இத்தலத்தை முதன் முதலில் கண்டு தரிசித்தவர். அதற்குப்பின் இறைவன் ஆணைப்படி ஆதிசேடனே பதஞ்சலி உருவத்தில் இங்கு வந்து புலிக்கால் முனிவருடன் சேர்ந்து கொண்டு இத்தலத்தில் தவம் செய்தார். இவர்கள் தொழுது வந்த லிங்கமே திருமூலட்டானேஸ்வரர் ஆகும். இவருடைய கோவில் நடராஜர் சந்நிதிக்கு வடபால் அமைந்துள்ளது. அம்பாள் பெயர் உமைய பார்வதி ஆகும்.                               ஒரு காலத்தில் தேவதாரு வனத்தில் வாழ்ந்த நாற்பத்து எண்ணாயிரம் முனிவர்களின் தவ செருக்கினை அளிக்கவும் , அம்முனி...

சிதம்பரம் ஸ்தலத்தின் பெருமைகள்!

Image
சைவர்களுக்கு கோவில் என்றால் சிதம்பரத்தையே  குறிக்கும். இக்கோவில் தலம் , தீர்த்தம் , மூர்த்தி என்ற மூவகையாலும் சிறந்து விளங்குகிறது. இக்கோவில் பஞ்ச பூதங்களுள் ஆகாயத் தலமாக விளங்குகிறது.   மற்ற தலங்கள் பின்வருமாறு,              திருவாரூர் -   ப்ரிதுவித்தலம் திருவானைக்கா - நீர் திருவண்ணாமலை - நெருப்பு திருக்காளத்தி - காற்று என்பன. இறைவன் 5 வகையான சபைகளில் நடனமாடுவதாகவும் ,   இது பொற்சபை என்றும் கூறுவர் .  மற்ற சபைகள் பின்வருமாறு  , திருவாலங்காடு - இரத்தின சபை மதுரை - வெள்ளியம்பலம் திருக்குற்றாலம் - சித்திரசபை திருநெல்வேலி - தாமிரசபை  என்பவை.    புலிக்கால் முனிவர் வழிப்பட்ட தலங்கள் புலியூர் எனப்படும். அவற்றில் இது பெரும்பற்றப் புலியூர் எனப்படும். மேலும் முக்தி தலங்கள் நான்கினுள் இது தரிசிக்க முக்தி தரும் தலம் ஆகும். பூஜாகால திருத்தலங்கள் ஆறினுள் ,  இது அர்த்த சாம பூஜைத் தலம் ஆகும். மேலும் ஆறு வகை ஆதாரத் தலங்களில் ,  இது அநாகத  ஆதா...

சிதம்பரம் பெயர் காரணம் ?

Image
                                  .                                          இப்பூவுலகில் புனித பூமி , பூலோக சொர்க்கம் , பூலோக கைலாயம் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் , உலக புருஷனின் இதயக் கமலமாய்த் திகழ்வது சிதம்பரம் என்னும் தலமாகும். இத்தலம் கடலூர் மாவட்டத்தில் , கொள்ளிடம் என்னும் நதிக்கு  வடக்கிலும் ,  மணிமுத்தாறு  நதிக்கு தெற்கிலும் , வங்கக்கடலுக்கு மேற்கில் 5 கல் தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் நடுவில் மெயின் லைன்-இருப்புப்பாதையில்  அமைந்துள்ளது.  இவ்வூரின் நடுநாயகமாக , தில்லை நடராஜர் கோவில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் இவ்விடம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக விளங்கியதால் , தில்லைவனம் என்றும் , புலிக்கால் முனிவர் என்பவர் பெரும்ப...