சிதம்பரத்தில் நடைப்பெற்ற அற்புதங்கள்

 1. மாணிக்கவாசக சுவாமிகள் ஒரு ஊமைப் பெண்னை பேச வைத்தது.
                     2. மாணிக்கவாசகர், திருவாசகத்தின் பொருள் கூத்தப் பெருமானே எனக் கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தது.
                     3. திருநாளைப் போவார் தீயில் மூழ்கி ஓர் அந்தன வடிவுக் கொண்டு எழுந்து இறைவனைத் தரிசித்தது.
                      4. திருநீலகண்டநாயனார் தமது மனைவியுடன், திருக்குளத்தில் மூழ்கி இளமை வரப் பெற்று இறைவனின் திருக்காட்சி கண்டு வணங்கி, நெடு நாள் வாழ்ந்தது.
                       5. பெத்தான் சாம்பான் என்னும் விறகு வெட்டிக்கு உமாபதிசிவம் தீட்சை அளித்து, பெத்தான் சாம்பானும், முள்ளிச் செடியும் முக்தியடைந்த்தது.
                       6. உபமன்யு என்ற குழந்தைக்காக பாற்கடலையே தருவித்தது.
                       7. சேற்றில் அழுந்தி ஓடாது தடைப்பட்டு நின்ற திருத்தேர் சேந்தனார்    திருப்பல்லாண்டுத் திருப்பதிகம் பாடிய அளவில், வடம் பிடிக்காமலேயே திருத்தேர் ஓடி நிலைக்கு வந்து நின்ற அற்புதம் நிகழ்ந்தது.
                       8. தில்லைச் சிற்றம்பலத்தின் மேற்றிசையில் பூட்டிக் கிடந்த ஒரு அறையில் தேவாரத் திருமுறைகள் செல்லரித்து கரையான் அரித்துக் கிடப்பதை திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் மூலம் எடுத்து 7 திருமுறைகளாக வகுத்தது.
             இது போன்ற பல அற்புதங்கள் இக்கோவிலில் நடந்துள்ளன. 

Comments

Popular posts from this blog

சிதம்பரம் பெயர் காரணம் ?

சிற்றம்பலம்

சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்