தில்லை கோவிந்தராசப் பெருமாள்

நடராஜப் பெருமானின் சந்நிதி எதிரில் தென்புறம் உள்ள படிகளின் மேலேறி நின்று பார்த்தால் தெற்கு நோக்கி நடனமாடும் நடராஜரையும், தென்வடலாக பள்ளி கொண்ட பெருமாளையும், ஒரே நேரத்தில் நாம் தரிசனம் செய்யலாம்.
  இவ்வித அமைப்பு  வேறு எங்குமே காண முடியாது. கி.பி. 8ம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிந்தராசப் பெருமானின் சந்நிதி தில்லை திருச்சித்திரக் கூடம் எனப்படும். திருமங்கை யாழ்வாராலும், குலசேகராழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.
சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து உறைவது இத்தலத்தின் பெருஞ்சிறப்பாகும். சைவ வைணவ ஒற்றுமைத்தலமாக சிதம்பரம் விளங்குகிறது.  அய்யப்ப தீட்சிதர் என்பவர், இருவரையும் ஒருங்கே போற்றும் முறையில் வட மொழியில் தோத்திரப் பாடல்கள் பாடியுள்ளார்.

Comments

Popular posts from this blog

சிதம்பரம் பெயர் காரணம் ?

சிற்றம்பலம்

சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்