சிதம்பர ரகசியம்

       
             
எல்லாம் வல்ல இறைவன் முக்கண்களும், நான்கு திருக்கரங்களும்இளம்பிறை, பாம்புஊமத்த நறுமலர்கங்கை தங்கிய சடை மகுடம் உடையவராகவும், புளித்தோலாடை அணிந்து நீறணிந்த மேனியும், குமிண்சிரிப்பு உடையவராகவும்இடப்பக்கத்தே உள்ள சிவகாமி அம்மையார் கண்டுகளிக்க ஆனந்தத் திருக்கூத்தினை ஆடியருளுகிறார். இவருக்கு அருகில் இரத்தின சபாபதி திருவுருவம் உள்ள பேழையும்ஸ்படிகலிங்கம் உள்ள பேழையும் வைக்கப்பட்டுள்ளன. நடராஜப் பெருமானுக்கு வலப்பக்கத்தில், ஒரு பொன்னாலான வில்வ இதழ் மாலை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இது கறுப்புத் திரை ஒன்றினால் மறைக்கப்பட்டுள்ளது. திரையை நீக்கி கற்பூரம் காட்டும் போது நாம் பலகணி வழியாக இந்த மாலையைத் தரிசிப்பது, இறைவன் அருவமாக வான் வெளியில் இருக்கிறார் என்பதைக் குறிக்கும். இதுவே சிதம்பர ரகசியம் ஆகும்.

Comments

Popular posts from this blog

சிதம்பரம் பெயர் காரணம் ?

சிற்றம்பலம்

சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்