நடராஜரின் ஆனந்த தாண்டவம்!

நடராஜப் பெருமானின் வலது மேல் திருக்கரத்தில் உள்ள உடுக்கை உலகின் தோற்றத்தையும், அபயமளிக்கும் திருக்கரம் காத்தலையும், இடது மேல் திருக்கரத்தில் உள்ள நெருப்பு அழித்தலையும், முயலகன் என்னும் பூதத்தின் மேல் உள்ள கால் மறைத்தலையும், தூக்கிய கால் முக்தி அருள் புரிதலையும் நிகழ்த்துகின்றன. இந்த நடனம் ஐந்தெழுத்து மந்திரமாகிய "நமசிவாய" என்பதைக் குறிக்கும் என்றும் கூறுவர். சுற்றியுள்ள திருவாச்சி ஓங்காரத்தைக் குறிக்கும் என்றும் கூறுவர். இவர் அசைந்தால் தான் உலக உயிர்கள் அசையும். இவர் தமது ஆட்டத்தை நிருத்தும் பொழுது உலக இயக்கமே நின்றுவிடும்.

Comments

Popular posts from this blog

சிதம்பரம் பெயர் காரணம் ?

சிற்றம்பலம்

சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்