ஆனித் திருமஞ்சனம்
ஆனி மாதம் உத்தர நட்சத்திரத்திற்கு முன் கொடியேற்றி
பத்து நாள் திருவிழா, மார்கழித் திருவிழா
போன்றே நடைபெறும். ஒன்பதாவது நாள் பஞ்ச மூர்த்திகள் தேர்த் திருவிழாவும், பத்தாம் நாள் அதிகாலை
திருமஞ்சனம், அர்ச்சனை, பூஜை அனைத்தும் நடைபெறும். மதியத்திற்கு மேல் அம்மையையும், அப்பனையும் கோவிலுக்குள்
சித்சபைக்கு நடனம்மாடிக் கொண்டே சென்று ஏளுந்தருலச் செய்யும் காட்சி பார்ப்போரை
மெய் சிலிர்க்க வைக்கும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை
நடைபெறும் இந்த தேர்த் திருவிழாவையும், நடனக் காட்சியையும் காண என்ன
தவம் செய்தோம் என்று மக்கள் பேசிக் கொள்வர். இந்த 2 திருவிழாக்களிலும், இக்கோவிலின் மூலவ மூர்த்தியான ஸ்ரீ நடராஜர் பெருமானே
வீதிக்கு எழுந்த்தருளி, தன்னைக் காண கோவிலுக்கு வர இயலாத
மனிதர்கள் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் திருக்காட்சி அருளுவது இறைவனின்
கருணையாகும்.


Comments
Post a Comment