மார்கழி திருவாதிரை திருவிழா

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடியேற்றி பத்து நாள் விழா நடைபெறும். முதல் எட்டு நாள் திருவிழா வரையிலும் பஞ்ச மூர்த்திகளின் வீதிவுலா நடைபெறும். ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா அன்று மூலவரான நடராஜர், சிவகாமி அம்மையார், விநாயகர், முருகன், சண்டீகேஸ்வரர் முதலான பஞ்ச மூர்த்திகள் ஐந்து தேர்களில் வீதி வலம் வருவார்கள். பின்னர் நடராஜரையும், சிவகாமியம்மையையும் ஆயிரங்கால் மண்டபத்தில்  எழுந்தருளச் செய்து பத்தாம் நாள் காலையில் திருமஞ்சனம் செய்து திருவாபரணங்கள் சாத்தி அர்ச்சனை, பூஜை முதலியன செய்து மதியத்திற்கு மேல் சித்சபைக்கு எழுந்தருளச் செய்வார்கள். அப்பொழுது நடராஜரும். சிவகாமியம்மையும் நடனம் ஆடிக் கொண்டே சித்சபைக்கு சென்று எளுந்தருளும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த நடனக் காட்சியைக் காண லட்சக் கணக்கில் மக்கள் திரண்டு நிற்பர். இதுவே புலிக்கால் முனிவருக்காகவும்,   பதஞ்சலி முனிவருக்காகவும் இறைவன் ஆடியருளிய ஆனந்த திருக்கூத்து ஆகும்.

Comments

Popular posts from this blog

சிதம்பரம் பெயர் காரணம் ?

சிற்றம்பலம்

சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்