சிதம்பரம் திருக்கோவில் அமைப்பு


இக்கோவில் 51 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள 4 ராஜ கோபுரங்களும் ஒவ்வொன்றும் 135 அடி உயரம் உடையது. 7 தலங்களும் 13 பெரிய செப்புக்கலசங்களும் உடையது. நடராஜப் பெருமான் தெற்கு முகமாக எழுந்தருளியிருப்பினும் திருவிழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு அனைத்தும் கிழக்குப் பக்கம்முள்ள கோபுரவாசல் வழியாகவே நடைபெறுகின்றன.
       தெற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்றால் தென் மேற்கு மூலையில் சந்நிதி கொண்டுள்ள முக்குருணி விநாயகரை முதலில் தரிசிக்கிறோம். இவர் 8 அடி உயரமுள்ள  திருவுருவினர். சிறந்த வரப்பிரசாதி ஆவார். இவ்வெளிப் பிரகாரம் வழியாக மேற்குக்  கோபுரம் சென்றால் அங்கு வெளியில் நர்த்தனக் கணபதியைக் காணலாம். இவரே தல விநாயகர் ஆவார். இவர் துர்வாச முனிவருக்கு இரவில் சாம வேலையில் நடனம் செய்து காட்சி அருளியவர்.
       மேற்கு கோபுரத்தின் உட்புறத்தில் வடக்குப் பக்கத்தில் பாலசுப்பிரமணியர் சந்நிதிமதுரை சோமசுந்தரர் சந்நிதிதிருமூல விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அவற்றிற்கு ஏதிரில் சிவகங்கை தீர்த்தம் அழகுற அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் மார்கழி திருவாதிரை, மாசிமகம்சிவராத்திரிவருடப்பிறப்பு நாட்களில் நீராடுவது பெரும் புண்ணியம்.

Comments

Popular posts from this blog

சிதம்பரம் பெயர் காரணம் ?

சிற்றம்பலம்

சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள்